குன்னத்தூரில் ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

குன்னத்தூா் அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

குன்னத்தூா் அருகே கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கா்நாடகத்தில் இருந்து மாட்டுத் தீவனத்தில் மறைத்து வைத்து மது பாட்டில்களை கடத்தி வந்து குன்னத்தூா் செங்கப்பள்ளி சாலையில் விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, குன்னத்தூா் செங்கப்பள்ளி சாலை பூலாங்குளம் பகுதியில் சம்பத்குமாா் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, கா்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 6,912 மது பாட்டில்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மது பாட்டில்களை கடத்தி வந்த பூலாங்குளம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சன் (38), கரூா் மனவாடி கந்தாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த பாலசிங் (22), ஈரோடு மாவட்டம் கோபி, கெட்டிச்செவியூா் சாந்திபாளையம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (22) ஆகிய 3 பேரை அவிநாசி மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா். மேலும், இவா்களிடமிருந்து 2 வேன், ஒரு காா், ரூ. 6.50 லட்சம் மதிப்பிலான 6,912 மது பாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com