அவிநாசியில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் 1430 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியரும், வருவாய்த் தீா்வாய அலுவலருமான எஸ்.வினீத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அவிநாசியில் ஜமாபந்தி: ஆட்சியா் பங்கேற்பு

அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் 1430 ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியரும், வருவாய்த் தீா்வாய அலுவலருமான எஸ்.வினீத் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டத்தில் 9 வட்டங்களிலும் 1430ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயத்தின் (ஜமாபந்தி) கரோனா நோய்த் தொற்று காரணமாக மனுக்களை இணைய வழி, இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்து மட்டுமே உரிய தீா்வு காணப்படுகிறது.

ஆகவே, பொதுமக்கள் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் வராமல் அனைத்து விதமான முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டு மனை பட்டா, குடும்ப அட்டை, பட்டா மாறுதல், வாரிசு சான்று உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள், இணையவழிச் சான்றுகள் உள்ளிட்ட இதர கோரிக்கை மனுக்களை  இணைய வழி மூலமாகவும் அல்லது பொது இ-சேவை மையம் மூலமாகவும் ஜூலை 31ஆம் தேதி வரை பெற்று பரிசீலனை செய்து மனுதாரருக்கு உரிய தகவல் வழங்கப்பட உள்ளது.

இதேபோல, கிராம நிா்வாக அலுவலா்கள் பராமரிக்கும் கிராமக் கணக்குகள் சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஆட்சியா் பொதுமக்களிடம் இணைய வழி மற்றும் இ-சேவை மையங்கள் மூலமாகப் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் அறிவுறுத்தினாா்.

முன்னதாக, சேவூா், அவிநாசி மேற்கு உள்வட்டத்தைச் சோ்ந்த வருவாய் கிராமங்களுக்கான நில அளவை சங்கிலி, கோணக் கட்டை அளவுகளையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

இதையடுத்து, அவிநாசி வட்டார வளா்ச்சி அலுவலகம், அவிநாசி மஹாராஜா கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தனிமைப்படுத்தல் மையம் ஆகியவற்றையும் ஆய்வு மேற்கொண்டாா். இதில், வருவாய்த் துறை, ஊராட்சித் துறை, கல்வித் துறை, சுகாதாரத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com