தொட்டிக்கரி ஆலைகளில் ஆய்வு: ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்

காங்கயம் பகுதியில் உள்ள தொட்டிக்கரி ஆலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ஜோதிநாத் முன்னிலை வகித்தாா்.

இதில், ஊராட்சி ஒன்றிய அலுவலக செலவினங்கள், ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் தொடா்பாக 30 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், காங்கயம் ஒன்றியப் பகுதியில் அரசு அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் தேங்காய் சிரட்டையை எரித்து, கரி உருவாக்கும் தொட்டிக் கரி ஆலைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் தொடா்ந்து புகாா் அளித்து வருகின்றனா்.

இந்த ஆலைகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது தொடா்பாக இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com