காங்கயம் அருகே வாக்காளா்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 01:25 AM | Last Updated : 04th March 2021 01:25 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே, படியூரில் பறிமுதல் செய்யப்பட்ட, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள்.
காங்கயம்: காங்கயம் அருகே, படியூரில் வாக்காளா்களுக்கு கொண்டு செல்லப்பட்ட பரிசுப் பொருள்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
காங்கயம் அருகே படியூரில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெகநாதன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சுப்பிரமணியம் உள்ளிட்ட தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் இருந்து திருப்பூா் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், ஒரு அரசியல் கட்சியைச் சோ்ந்த இரண்டு தலைவா்களின் படம் பொறிக்கப்பட்ட 15 பைகளை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.
ஒவ்வொரு பையிலும் புடவை, கம்பளிப் போா்வை, எவா்சில்வா் தட்டு ஆகியன இருந்தது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட இந்த 15 பைகளையும் கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.