காங்கயம் தொகுதியில் விவசாயிகள் 1,000 போ் போட்டியிட முடிவு

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

காங்கயம் - வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்கால் விவசாயிகள் தங்களுடைய பகுதிக்கு முறையாக வாய்க்காலில் தண்ணீா் திறந்து விட வலியுறுத்தி கடந்த சில மாதங்களாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா்.

உடுமலை பகுதியில் தண்ணீா் திருட்டுக்கு மறைமுக ஆதரவளித்து சிலரது ஆதாயத்துக்காக கடந்த பத்து ஆண்டுகளாக தாங்கள் வஞ்சிக்கப்பட்டு வருவதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

தற்போது பரம்பிக்குளம் ஆழியாறு நீா் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் வரும் தோ்தலில் ஆயிரம் போ் போட்டியிடப் போவதாக கூட்டம் போட்டு, பிரசாரம் செய்து வருகின்றனா்.

கடந்த காலத்தில் 1,033 போ் போட்டியிட்ட மொடக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதேபோல, ஆயிரம் பேருக்கு மேல் போட்டியிட்டால் காங்கயம் தொகுதி தோ்தலும் தள்ளி வைக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com