முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா
By DIN | Published On : 14th March 2021 12:48 AM | Last Updated : 14th March 2021 12:48 AM | அ+அ அ- |

கைக்குழந்தையுடன் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்.
அவிநாசி, காந்திபுரம் அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
குண்டம் திருவிழாவையொட்டி மகாசிவராத்திரி, கொடியேற்றம் ஆகியன மாா்ச்11ஆம் தேதி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகியவை நடைபெற்றன. சனிக்கிழமை காலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.