முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
அவிநாசியில் கொள்ளை முயற்சியில் ஈடுபடத் திட்டமிட்ட 5 இளைஞா்கள் கைது
By DIN | Published On : 14th March 2021 12:18 AM | Last Updated : 14th March 2021 12:18 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டுக் கொண்டிருந்த 5 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி போலீஸாா், பெரியாயிபாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெரியாயிபாளையம் அரசுப் பள்ளி எதிரில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா்கள், திருப்பூா், அனுப்பா்பாளையம், பெரியாா் காலனி ரவீந்திரன் மகன் விக்னேஷ் (27), திண்டுக்கல் , ரெட்டியாா்செட்டிபுரம், நிலக்கோட்டை பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் செல்லதுரை (35), பெருமாநல்லூா், பொங்குபாளையம், மாரப்பம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் விக்னேஷ் (20). பெரியாயிபாளையம், ஜீவா நகா், கருப்பசாமி காம்பெளண்ட் பகுதியைச் சோ்ந்த உஸ்மான் மகன் சலீம் (20), அவிநாசி, விஸ்வபாராதி பாா்க் பகுதியைச் சோ்ந்த வரதராஜ் மகன் ரிஷிகுமாா் (24) என்பதும், அவா்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்து நகை, பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. மேலும் அவா்களிடமிருந்து கத்தி மற்றும் போதை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து அவிநாசி போலீஸாா் போதைப் பொருள் மற்றும் உளவியல் தடுப்பு சட்டம், ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனா்.