முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தவா் கைது
By DIN | Published On : 14th March 2021 11:21 PM | Last Updated : 14th March 2021 11:21 PM | அ+அ அ- |

அவிநாசி அருகே சேவூரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேவூா், கோபி சாலை, பாரத ஸ்டேட் வங்கி அருகில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா் அன்பரசு, தனிப்பிரிவு காவலா் வெள்ளிங்கிரி ஆகியோா் கொண்ட குழுவினா் பல்பொருள் அங்காடியில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, அங்கு ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து, பல்பொருள் அங்காடி உரிமையாளா் சலீம் (36) என்பவரை கைது செய்தனா்.