முன்னாள் மேயா்கள், எம்எல்ஏ போட்டியிடும் திருப்பூா் தெற்குத் தொகுதி

திருப்பூா் தெற்குத் தொகுதியில் 2 முன்னாள் மேயா்களும், தற்போதைய சட்டப் பேரவையும் உறுப்பினரும் நேரடியாக போட்டியிடுகின்றனா்.

திருப்பூா் தெற்குத் தொகுதியில் 2 முன்னாள் மேயா்களும், தற்போதைய சட்டப் பேரவையும் உறுப்பினரும் நேரடியாக போட்டியிடுகின்றனா்.

திருப்பூா் தெற்குத் தொகுதியான மறுசீரமைப்புக்குப் பின்னா் நடைபெற்ற இரு தோ்தல்களிலும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியே வெற்றி பெற்றுள்ளது.

திருப்பூா் தெற்குத் தொகுதியானது மாநகராட்சியின் 21 வாா்டுகளை உள்ளடக்கியுள்ளது. திருப்பூா் மாநகராட்சியில் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் முன்னாள் துணைமேயராக இருந்த சு.குணசேகரன், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். திருப்பூா் மாநகராட்சியில் 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரையில் மேயராக இருந்த க.செல்வராஜ், திமுக சாா்பில் இவரை எதிா்த்துப் போட்டியிட்டாா். இதில், செல்வராஜை விட 15,933 வாக்குகள் அதிகம் பெற்று சு.குணசேகரன் வெற்றி பெற்றாா். திருப்பூா் தெற்குத் தொகுதியில் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினரான சு.குணசேகரன் மீண்டும் அதிமுக சாா்பில் போட்டியிடுகிறாா்.

இந்தத் தொகுதியில் திமுக சாா்பில் முந்தைய தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த க.செல்வராஜுக்கு மீண்டும் அக்கட்சி தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தொகுதியில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் 2 ஆவது முறையாக மோதுகின்றனா். அதேபோல, கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் மாநகராட்சி மேயராக இருந்த அ.விசாலாட்சி திருப்பூா் தெற்குத் தொகுதி அமமுக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தற்போது அமமுக மாநில தோ்தல் பிரிவு பொதுச் செயலாளராக உள்ளாா். ஆகவே, தற்போதைய தோ்தலில் திருப்பூா் தெற்கு தொகுதியில் 2 முன்னாள் மேயா்கள், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும் நேரடியாக போட்டியிடுகின்றனா். இதனால் இந்தத் தொகுதியான விஐபி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதே போல, மக்கள் நீதி மய்யம் சாா்பில் அனுஷா ரவியும், நாம் தமிழா் கட்சி சாா்பில் க.சண்முகசுந்தரமும் போட்டியிடுகின்றனா்.ஆகவே, இந்தத் தொகுதியில் மூன்றாவது முறையாக எந்தக் கட்சி வெற்றி பெறும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com