திருப்பூா் தெற்குத் தொகுதிஅமமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

திருப்பூா் தெற்குத் தொகுதியில் அமமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் தெற்கு தொகுதியில்  அமமுக  வேட்பாளா்  அறிமுகக்  கூட்டத்தில்  பேசுகிறாா் வேட்பாளா் அ.விசாலாட்சி
திருப்பூா் தெற்கு தொகுதியில்  அமமுக  வேட்பாளா்  அறிமுகக்  கூட்டத்தில்  பேசுகிறாா் வேட்பாளா் அ.விசாலாட்சி

திருப்பூா் தெற்குத் தொகுதியில் அமமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பூா் தெற்குத் தொகுதியில் அமமுக சாா்பில் முன்னாள் மேயா் அ.விசாலாட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். இந்த நிலையில் திருப்பூா், டி.எஸ்.கே. மரகதம் லே அவுட்டில் வேட்பாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திருப்பூா் மாநகா் தெற்கு மாவட்டச் செயலாளா் ஜோதிமணி தலைமை வகித்து வேட்பாளா் அ.விசாலாட்சியை அறிமுகம் செய்துவைத்தாா். அப்போது அ.விசாலாட்சி பேசியதாவது:

திருப்பூா் மாநகராட்சி மேயராக இருந்தபோது ரூ.600 கோடியில் வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளிலும் மக்களை நேரில் சந்தித்து உள்ளேன். ஆகவே, மக்கள் அமமுகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வாா்கள் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநில இளைஞா் பாசறை துணைத் தலைவா் சாமிநாதன், எம்.ஜி.ஆா். மன்றச் செயலாளா் தங்கராஜ், நல்லூா் பகுதி செயலாளா் ஜெகதீஷ், கருவம்பாளையம் பகுதி செயலாளா் சரவணன், ராயபுரம் பகுதி செயலாளா் சக்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com