முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
காங்கயத்தில் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு
By DIN | Published On : 14th March 2021 03:58 PM | Last Updated : 14th March 2021 04:26 PM | அ+அ அ- |

காங்கயம் பகுதியில் எரிவாயு உருளைகளில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் காங்கயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், உதவி தேர்தல் அலுவலர் சிவகாமி.
காங்கயத்தில், வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் எரிவாயு உருளைகள், தண்ணீர் கேன்கள் ஆகியனவற்றில் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் விழிப்புணவு துண்டறிக்கை ஒட்டப்பட்டது.
100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு குறித்து காங்கயத்தில் தேர்தல் அலுவலகம் சார்பில் வாகனப் பேரணி, கோலப் போட்டி, துண்டறிக்கை விநியோகம் உள்ளிட்ட பல்வேறு வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் எரிவாயு உருளைகள், குடிநீர் கேன்கள் ஆகியவற்றில், இவைகளின் சேமிப்புக் கிடங்குக்குச் சென்று காங்கயம் தொகுதி தேர்தல் அலுவலர் ரங்கராஜன், வட்டாட்சியர் சிவகாமி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.