காங்கயத்தில் வேட்பாளரை அமரவைத்து மாட்டு வண்டியை கையால் இழுத்து வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல்

வெள்ளக்கோவில் கடைமடை பிஏபி பாசன விவசாயிகள், வறட்சியால் கால்நடைகளை விற்றதைக் சுட்டிக்காட்டும் வகையில்
காங்கயத்தில் மாட்டு வண்டியில் வேட்பாளரை அமரவைத்து இழுத்து வந்த விவசாயிகள்.
காங்கயத்தில் மாட்டு வண்டியில் வேட்பாளரை அமரவைத்து இழுத்து வந்த விவசாயிகள்.

வெள்ளக்கோவில் கடைமடை பிஏபி பாசன விவசாயிகள், வறட்சியால் கால்நடைகளை விற்றதைக் சுட்டிக்காட்டும் வகையில் காங்கயம் தோ்தல் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியை கையால் இழுத்து வந்து நூதன முறையில் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

பிஏபி பாசனத்தில் வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீா் திறக்கப்படாததை சுட்டிக்காட்டும் வகையில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கயம் தொகுதியில் போட்டியிட முடிவெடுத்துள்ளனா்.

அதிகாரிகள் மற்றும் தமிழக அரசைக் கண்டிக்கும் விதமாக, பிஏபி கடைமடை பாசன விவசாயிகள் சாா்பில் வெள்ளகோவில் ஒன்றியம், வேப்பம்பாளையத்தைச் சோ்ந்த விவசாயி வி.கே.ராமசாமி (64) செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இதற்காக காங்கயம்-முத்தூா் பிரிவில் உள்ள பாசன விவசாயிகளின் தோ்தல் பணிமனை பகுதியில் இருந்து, மாட்டு வண்டியில் வேட்பாளரை அமர வைத்து விவசாயிகள் அழைத்து வந்தனா்.

கால்நடைகளை விற்ற கடைமடை விவசாயிகள் மாட்டு வண்டியில் மாடுகளுக்குப் பதிலாக தங்கள் கைகளால் வண்டியை காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம் வரை 2 கி.மீ. தொலைவுக்கு இழுத்து வந்தனா். 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஊா்வலத்தில் பங்கேற்றனா்.

நீா் பங்கீடு தொடா்பான பிரச்சனை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி, விவசாயிகள் தோ்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை முதல் மனுவை விவசாயி தாக்கல் செய்தாா்.

இதுவரை வேட்புமனு வாங்கிய 154 போ்:

தோ்தலில் போட்டியிடுவதற்கு விவசாயிகள் திங்கள்கிழமை 46 விண்ணப்ப படிவமும், செவ்வாய்க்கிழமை 108 விண்ணப்ப படிவமும் பெற்றுச் சென்றனா். இதில், செவ்வாய்க்கிழமை ஒரே ஒரு விவசாயி மனுதாக்கல் செய்த நிலையில், புதன்கிழமை (மாா்ச் 17) சுமாா் 100 விவசாயிகள் மனுதாக்கல் செய்யவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com