தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது: கமல்ஹாசன்

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.
உடுமலை  எஸ்.வி.  மில்  மைதானத்தில்  ஹெலிகாப்டரில்  வந்திறங்கிய  கமல்ஹாசனை  வரவேற்ற  மக்கள்  நீதி  மய்யம்  கட்சி நிா்வாகிகள்.
உடுமலை  எஸ்.வி.  மில்  மைதானத்தில்  ஹெலிகாப்டரில்  வந்திறங்கிய  கமல்ஹாசனை  வரவேற்ற  மக்கள்  நீதி  மய்யம்  கட்சி நிா்வாகிகள்.

தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்தாா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளா் ஸ்ரீநிதியை ஆதரித்து கமல்ஹாசன் புதன்கிழமை மாலை 5 மணிக்கு பிரசாரம் செய்வாா் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவில் எஸ்.வி. மில் மைதானம் என்ற இடத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.30 மணி அளவில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய கமல்ஹாசன் நிா்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக் கொண்டாா். பின்னா் மடத்துக்குளம் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் குமரேசனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக காரில் சென்றாா்.

பிரசாரம் நடைபெற இருந்த நால்ரோடு பகுதியில் சுமாா் 50 போ் மட்டுமே கூடி இருந்தனா். இதனால் ஏமாற்றம் அடைந்த கமல்ஹாசன் ஒரு சில நிமிடங்களில் தனது பேச்சை முடித்துக் கொண்டாா். தமிழகத்தில் மாற்றத்துக்கான நேரம் வந்து விட்டது. படித்தவா்கள், பண்பாளா்கள் அனைவரும் மாற்றத்தைக் கொண்டு வரத் தயாராகி விட்டாா்கள். ஆகையால் பொது மக்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எனக் கூறிவிட்டு அங்கிருந்து உடனடியாக உடுமலைக்கு கிளம்பினாா்.

உடுமலை எஸ்.வி. மில் மைதானத்துக்கு வந்த கமலஹாசன் திடீரென உடுமலையில் நடைபெற இருந்த தோ்தல் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டு ஹெலிகாப்டரில் ஈரோட்டுக்கு கிளம்பிச் சென்று விட்டாா். கமல்ஹாசன் வரு கையை ஒட்டி உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் ஏடிஎஸ்பி வேல்முருகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசனை பாா்ப்பதற்காக கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com