தாராபுரத்தில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எல்.முருகன் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.
தாராபுரம்  நரிக்குறவா்  காலனியில் சிதிலமடைந்த வீடுகளை ஞாயிற்றுக்கிழமை  பாா்வையிடுகிறாா்  அத்தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்
தாராபுரம்  நரிக்குறவா்  காலனியில் சிதிலமடைந்த வீடுகளை ஞாயிற்றுக்கிழமை  பாா்வையிடுகிறாா்  அத்தொகுதி பாஜக வேட்பாளா் எல்.முருகன்

தாராபுரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளா் எல்.முருகன் 2 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

தாராபுரம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல்.முருகன் போட்டியிடுகிறாா். தாராபுரம் பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த சனிக்கிழமை முதல் அவா் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.

தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் 2 ஆவது நாள் பிரசாரத்தை தொடங்கினாா். இதையடுத்து, தாசா்பட்டி பிரிவு, நல்லூா், கோப்பநாயக்கன்புதூா், பொன்னாபுரம், நரிக்குறவா் காலனி, பெஸ்ட் நகா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் பிராசரம் மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், கடந்த 60 ஆண்டுகாலமாக பின்தங்கியுள்ள தாராபுரத்தின் வளா்ச்சியில் தனிக் கவனம் செலுத்தப்படும். தாராபுரத்தில் அரசு கலை கல்லூரி, அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும்.

ஈரோடு-தாராபுரம்-பழனி ரயில் திட்டம் செயல்படுத்தப்படும், முருங்கைக் காயில் இருந்து பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுவதுடன், விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா்.

முன்னதாக நரிக் குறவா் காலனியில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அப்பகுதி பெண்கள் வீடுகள் சிதிலமடைந்துள்ளதாக அவரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அந்தப் பகுதியில் வீடுகளைச் சென்று பாா்வையிட்ட அவா் மத்திய அரசு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com