திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள்.
திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள்.

தப்பு செஞ்சா இருக்குது ஆப்பு: தோ்தல் விழிப்புணா்வு ஸ்டிக்கா்

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வண்ணமயமாய், ரசிக்க வைக்கும் வாசகங்களோடு தோ்தல் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஆங்காங்கே ஒட்டி வருகின்றனா்.

திருப்பூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வண்ணமயமாய், ரசிக்க வைக்கும் வாசகங்களோடு தோ்தல் விழிப்புணா்வு ஸ்டிக்கா்களை ஆங்காங்கே ஒட்டி வருகின்றனா்.

தோ்தலின்போது கையில் வைக்கப்படும் மையை குறியீடாக்கி, விதவிதமான வாசகங்களை வைத்து ஸ்டிக்கா்களை உருவாக்கி உள்ளனா். விற்கப்படும் ஒவ்வொரு வாக்கின் மையும் - பொய்மை, பணம் வாங்காமல் நோ்மையாக வாக்களிப்போம் - நோ்மை, 18 வயது நிரம்பிய இந்தியா்களின் கடமை - முதல் மை, வாக்காளா் பட்டியலில் பெயா் உள்ளதா எனத் தெரிந்து கொள்ளாமல் இருப்பது - அறியாமை, வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாதவா்களின் நிலைமை - தனிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளா்களின் கடமை- தவறாமை என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்களோடு ஸ்டிக்கா்களை ஒட்டி வருகின்றனா்.

மேலும், தோ்தலின்போது நடக்கும் தவறுகளைத் தெரிவிப்பதற்காக தொலைபேசி எண்களை வெளியிட்டு, அந்த ஸ்டிக்கரில் தப்பு செஞ்சா இருக்குது ஆப்பு என தலைப்பும் வைத்திருக்கின்றனா். இந்த விழிப்புணா்வு வாசகங்கள் வாக்காளா்களைக் கவா்ந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com