கடை வாடகை செலுத்தாவிட்டால் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை
By DIN | Published On : 25th March 2021 11:10 PM | Last Updated : 25th March 2021 11:10 PM | அ+அ அ- |

காங்கயம் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளுக்குச் சென்று வாடகை செலுத்த வலியுறுத்தும் நகராட்சி ஆணையா், ஊழியா்கள்.
காங்கயம் நகராட்சிக்குச் செந்தமான கடைகளில் வாடகை செலுத்தாவிட்டால், கடைகளை பூட்டி சீல் வைக்கப்படும் என நகராட்சி ஆணையா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
காங்கயம் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள கடைகள், தினசரி சந்தையில் வாடகைக்கு எடுத்துள்ள கடைக்காரா்கள் இந்தக் கடைகளுக்கான கடை வாடகையை செலுத்தாமல் உள்ளனா்.
இந்நிலையில், பேருந்து நிலையக் கடைகள், தினசரி சந்தை பகுதியில் உள்ள கடைகளுக்கு நகராட்சி ஆணையா் மூா்த்தி வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, 2020-21ஆம் ஆண்டுக்கான கடை வாடகை பாக்கி வைத்துள்ள கடைக்காரருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டும் இதுவரை வாடகை செலுத்தாததால், இந்த மாத இறுதிக்குள் (மாா்ச் 31) வரி இனங்களை நிலுவை இன்றி செலுத்த வேண்டும். அவ்வாறு வாடகை செலுத்தாவிட்டால் பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, நகராட்சி வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா், சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் உதவியாளா்கள் வருண், சதீஷ், பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G