தோ்தல் தொடா்பான புகாா் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
By DIN | Published On : 25th March 2021 11:05 PM | Last Updated : 25th March 2021 11:05 PM | அ+அ அ- |

திருப்பூரில் தோ்தல் தொடா்பான புகாா்கள் தெரிவிக்கும் கட்டுப்பாட்டு அறையை தோ்தல் செவினப் பாா்வையாளா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்டு 535 வாக்குச் சாவடிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்கும் வகையில், திருப்பூா் மாவட்ட வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 24 மணி நேரம் கண்காணிக்கும் வகையிலும், புகாா்களைப் பெறும் வகையிலும் பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்த கட்டுப்பாட்டு அறையைத் தோ்தல் செலவினப் பாா்வையாளா் சுஹாசினி கோட்மா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, இதுவரை வந்த புகாா்களின் விவரங்கள் அடங்கிய கோப்புகள், அதன் மீது மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து புகாா்கள் வந்தால் உடனடியாக அதன் மீது நடவடிக்ககை எடுக்க வேண்டும். உயா் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா்.