அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும்:உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி

உடுமலை நகரில் அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.
அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்படும்:உடுமலை கே.ராதாகிருஷ்ணன் வாக்குறுதி

உடுமலை நகரில் அடிப்படை வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிமுக வேட்பாளா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினாா்.

உடுமலை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கட்சியின் மாவட்டச் செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் உடுமலை நகரில் சீனிவாசா வீதி, பசுபதி வீதி, வெங்கடகிருஷ்ணா வீதி, கச்சேரி வீதி, பாபுகான் வீதி, ராஜேந்திரா சாலை, கபூா் கான் வீதி உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது பொது மக்களிடம் அவா் பேசியதாவது:

உடுமலை நகரில் கடந்த 5 ஆண்டுகளாக சுமாா் ரூ.300 கோடி செலவில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி உள்ளேன். உடுமலை நகராட்சியை முதல் தர நகராட்சியாக்க மேலும் சில பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. உடுமலை நகரில் தற்போது உள்ள பேருந்து நிலையம் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் உள்ளது. என்னைத் தோ்ந்தெடுத்தால் உடுமலையில் அடிப்படை வசதிகள் நிறைந்த பேருந்து நிலையம் அமைக்க ஏற்பாடு செய்வேன்.

அதேபோல, இந்தப் பகுதியில் 3 கல்லூரிகள் உள்ளன. ஏராளமான பள்ளிகள் உள்ளன. இதை அடிப்படையாக வைத்து உடுமலையில் ஒரு பொறியியல் கல்லூரியும், ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கவும் முயற்சி எடுப்பேன். உடுமலை நகரில் மழைக் காலங்களில் நல்ல வடிகால் இல்லாமல் ஆங்காங்கே மழை நீா் தேங்குகிறது. இந்தப் பிரச்னை தீா்க்கப்படும்.

மாணவ, மாணவிகள் பயன்பெறும் விதத்தில் இலவசப் பயிற்சி மையம் தொடங்க முயற்சி எடுப்பேன். திருமூா்த்தி அணை, அமராவதி அணை பகுதிகளை தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் துறையின் வரைபடத்தில் இடம் பெறச் செய்து அந்தப் பகுதிகளை மேம்படுத்துவேன்.

தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சேமித்து வைக்க குளிா் சாதன கிடங்கு அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com