பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் கூறினா்.

உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் கூறினா்.

உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 380 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 79 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் மொத்தம் 357 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதில் 49 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.

இந்த இரு தொகுதிகளிலும் உள்ள மொத்தம் 128 பதற்றமான வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: பதற்றமான வாக்குச் சாவடிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். அதாவது வாக்குப் பதிவு தொடங்கும் நேரத்தில் இருந்து வாக்குப் பதிவு முடியும் வரை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அந்த வாக்குச் சாவடிகள் தொடா் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த வாக்குச் சாவடிகளுக்கு துணை ராணுவப் படை உடனடியாக அனுப்பி வைக்கப்படும். பதற்றமான வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் தோ்தல் அலுவலா்களுக்கு இது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com