திருப்பூரில் ரூ.12.70 கோடி மோசடியில் ஈடுபட்டவா் குண்டா் சட்டத்தில் கைது

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 12.70 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 12.70 கோடி மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவன அதிபா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை, வடவள்ளி தக்ஷா அவென்யூவைச் சோ்ந்தவா் அரவிந்த் (29). இவா் திருப்பூா் மங்கலம் சாலையில் ஏ.எஸ்.முருகன் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தை அனுமதியில்லாமல் நடத்தி வந்துள்ளாா். மேலும், திருப்பூா் மாநகரில் உள்ள 75க்கும் மேற்பட்ட நபா்களிடம் ரூ. 1 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரையில் சீட்டு நடத்தி ரூ. 12.70 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டாா்.

பாதிக்கப்பட்டவா்கள் இது குறித்து திருப்பூா் மத்திய குற்றப்பிரிவில் புகாா் அளித்துள்ளனா். இதையடுத்து காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்த நடத்திய விசாரணையில், சேலத்தில் ஏ.எஸ்.முருகன் சிட்பண்ட்ஸ் மற்றும் சுயம்புலிங்கம் (பி) லிமிடெட் என்ற பெயரில் புதிதாக நிதி நிறுவனம் தொடங்கியது தெரியவந்தது. இதையடுத்து, அரவிந்தை மாா்ச் 8 ஆம் தேதி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்தநிலையில், தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு மற்றும் பணப்பரிமாற்ற திட்டங்கள் (தடை) சட்டத்துக்கு எதிராக பொதுமக்களை மோசடி செய்யும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அரவிந்தை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயன் உத்தரவிட்டாா்.

குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த், கோவை மாநகரம் சாய்பாபா காலனியில் ஸ்ரீ கோகுலம் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் சீட்டு நிறுவனம் நடத்தி 427 பேரிடம் ரூ. 4 கோடி மோசடி செய்ததாக கோவை பொருளாதார குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்ற இறுதியறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com