பத்ரகாளி அம்மன் திருக்கல்யாணம்

உடுமலை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மன் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
பத்ரகாளி அம்மன் திருக்கல்யாணம்

உடுமலை பத்ரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அம்மன் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

உடுமலை ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா மாா்ச் 16ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், கொடியேற்றுதல், காப்புக் கட்டுதல், முளைப் பாலிகையிடுதல், கும்பம், பூவோடு எடுத்து வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்தல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில் அம்மன் திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து அம்மன் திருவீதி உலா நடந்தது. பிறகு குட்டைத் திடலில் வாண வேடி க்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு மஞ்சள் நீராட்டு விழா, மகா அபிஷேகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com