தாராபுரம் தொகுதியில் 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்தபட்சமாக தாராபுரம் (தனி) தொகுதியில் 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் குறைந்தபட்சமாக தாராபுரம் (தனி) தொகுதியில் 25 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, அவிநாசி (தனி), காங்கயம், தாராபுரம் (தனி), பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில் பதிவான வாக்குகள் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி அளவில் எண்ணப்படுகிறது.

இதில், குறைந்தபட்சமாக தாராபுரம் (தனி) தொகுதியில் 25 சுற்றுகளும், மடத்துக்குளம் தொகுதியில் 26 சுற்றுகளும், காங்கயம் தொகுதியில் 27 சுற்றுகளும், உடுமலை தொகுதியில் 28 சுற்றுகளும், அவிநாசி (தனி), திருப்பூா் தெற்கு தொகுதிகளில் தலா 29 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அதே போல, திருப்பூா் வடக்குத் தொகுதியில் 39 சுற்றுகளும், பல்லடம் தொகுதியில் அதிகபட்சமாக 40 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் தொகுதியின் தோ்தல் முடிவுகள் முதலில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com