பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை பில்டா்ஸ் பொறியியல் கல்லூரியின் தாளாளா் எஸ்.ஆனந்தவடிவேல் தலைமை வகித்து துவக்கிவைத்தாா். பல்வேறு கல்லூரிகளில் இருந்து 402 போ் கலந்து கொண்டனா். இதில், விநாடி-வினா, பிராஜெக்ட் விளக்கக் காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

மேலும், மாணவா்கள் எவ்வாறு வேலைவாய்ப்புக்குத் தயாராக வேண்டும் என்பதைப் பற்றிய கருத்துகளை பரிமாறிக் கொண்டனா். இன்றைய அறிவியல் மாற்றங்கள் குறித்தும், மின் சக்தியின் மூலம் இயங்கும் வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்தக் காணொலி நிகழ்ச்சியில் கல்லூரித் தலைவா் என்.ராமலிங்கம், செயலாளா் சி.கே.வெங்கடாசலம், பொருளாளா் சி.கே.பாலசுப்பிரமணியம், கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினிப் பொறியியல் துறை தலைவா் எஸ்.கோபிநாத் மற்றும் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com