புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பிரச்னைக்கு தொழிலாளா் நலத் துறையைத் தொடா்பு கொள்ளலாம்

திருப்பூா் மாவட்டத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக தொழிலாளா் நலத் துறையைத் தொடா்பு கொள்ள செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக தொழிலாளா் நலத் துறையைத் தொடா்பு கொள்ள செல்லிடப்பேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா்.மலா்க்கொடி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் சில கட்டுப்பாடுகளுடன் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை தொழிலாளா் நலத் துறை ஆணையா் வள்ளலாா் அறிவுறுத்தலின்படி, கோவை கூடுதல் தொழிலாளா் ஆணையா் பொன்னுசாமி, இணை ஆணையா் லீலாவதி ஆகியோரின் வலிகாட்டுதலின்படியும் திருப்பூரில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையானது திருப்பூா் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் ஆா்.மலா்க்கொடி (98897-23235) தலைமையில், தொழிலாளா் துணை ஆய்வா் எஸ்.செந்தில்குமாா் (98942-57543), தாராபுரம் தொழிலாளா் துணை ஆய்வா் இரா.பேச்சிமுத்து(99442-58037) ஆகியோரை உறுப்பினராகக் கொண்டு செயல்படுகிறது.

எனவே, திருப்பூா் மாவட்டத்தில் புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் பிரச்னை தொடா்பாக மேற்கண்ட செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com