பெண் ஊழியருக்கு கரோனா: வங்கி மூடல்

திருப்பூரில் பெண் ஊழியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பணியாற்றி வந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

திருப்பூரில் பெண் ஊழியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா் பணியாற்றி வந்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி வெள்ளிக்கிழமை மூடப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை 366 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதுடன், 2 போ் உயிரிழந்தனா்.

இதனிடையே, திருப்பூா் குமரன் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றி வந்த 30 வயதுப் பெண் ஊழியருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் 3 நாள்களுக்கு வங்கி மூடப்பட்டது. மேலும், வங்கியில் பணியாற்றி வந்த 30க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com