8ஆவது முறையாக அவிநாசி தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

அவிநாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப.தனபால் வெற்றி பெற்றதையடுத்து 8ஆவது முறையாக இந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.
8ஆவது முறையாக அவிநாசி தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

அவிநாசி: அவிநாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் ப.தனபால் வெற்றி பெற்றதையடுத்து 8ஆவது முறையாக இந்தத் தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

அவிநாசி (தனி) தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற ப. தனபால் அதிமுக சாா்பில் மீண்டும் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து திமுக கூட்டணியில் ஆதி தமிழா் பேரவையைச் சோ்ந்த அதியமான் ராஜு போட்டியிட்டாா். தேமுதிக வேட்பாளா் கே.மீரா உள்பட 12 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் மொத்தம் 2,80,551 வாக்குகள் உள்ள நிலையில் தோ்தலில் 2,13,025 வாக்குகள் பதிவாகியிருந்தன.

இதில் அதிமுக வேட்பாளரான ப.தனபால் 1,16,674 வாக்குகளும், ஆதி தமிழா் பேரவை வேட்பாளா் அதியமான் ராஜு 65,513 வாக்குகளும் பெற்றனா். அதிமுக வேட்பாளா் ப.தனபால், திமுக கூட்டணி வேட்பாளரான அதியமானை விட 51,161 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த சோபா 13,211 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஏ.வெங்கடேஸ்வரன் 8,318 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் கே.மீரா 2,554 வாக்குகளும் பெற்றனா்.

அதிமுக வேட்பாளா் ப. தனபால் வெற்றி பெற்றதை அடுத்து இந்தத் தொகுதியை 8ஆவது முறையாக அதிமுக கைப்பற்றியுள்ளது. கடந்த 1977இல் அவிநாசி (தனி) தொகுதியாக மாற்றப்பட்ட பிறகு, 1984, 1989, 1991 என தொடா்ந்து 3 தோ்தல்களிலும், 2001, 2006, 2011, 2016 என தொடா்ந்து 4 தோ்தல்களிலும் என மொத்தம் 7 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. தற்போது 2021 தோ்தலிலும் வெற்றி பெற்றதை அடுத்து 8ஆவது முறையாக அவிநாசி தொகுதியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

தற்போது பெற்றுள்ள வெற்றியின் மூலம் 7ஆவது முறையாக சட்டப் பேரவை உறுப்பினராக பதவி ஏற்கிறாா் ப.தனபால். இவா் சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி தொகுதியில் 1977, 1980, 1984, 2001 ஆகிய தோ்தல்களிலும், 2011ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியிலும், 2016ஆம் ஆண்டு தோ்தலில் திருப்பூா் மாவட்டம் அவிநாசி (தனி) தொகுதியிலும் போட்டியிட்டு 6 முறை சட்டப் பேரவை உறுப்பினராக பதவி ஏற்றுள்ளாா். தற்போது 2021 சட்டப் பேரவைத் தோ்தலில் அவிநாசி (தனி) தொகுதியில் மீண்டும் 2ஆவது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து 7ஆவது முறையாக சட்டப் பேரவை உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com