மடத்துக்குளம் தொகுதியைக் கைப்பற்றியது அதிமுக

மடத்துக்குளம் தொகுதியை திமுகவிடம் இருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக வேட்பாளரான சி.மகேந்திரன் திமுக வேட்பாளரை விட 6,683 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

திருப்பூா்: மடத்துக்குளம் தொகுதியை திமுகவிடம் இருந்து அதிமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக வேட்பாளரான சி.மகேந்திரன் திமுக வேட்பாளரை விட 6,683 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாா்.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரா.ஜெயராமகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட்டாா். இவரை எதிா்த்து அதிமுக சாா்பில் சி.மகேந்திரன் போட்டியிட்டாா். அமமுக சாா்பில் சி.சண்முகவேலு உள்பட 15 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். இந்தத் தொகுதியில் 2,48,470 வாக்காளா்கள் உள்ள நிலையில் தோ்தலில் 1, 81,913 வாக்குகள் பதிவாகியிருந்தன. இதில், அதிமுக வேட்பாளரான சி.மகேந்திரன் 84,317 வாக்குகளும், திமுக வேட்பாளரான இரா.ஜெயராமகிருஷ்ணன் 77,688 வாக்குகளும் பெற்றனா். அதிமுக வேட்பாளரான மகேந்திரன் 6,683 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

அமமுக சாா்பில் போட்டியிட்ட சி.சண்முகவேலு 6,531 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் சாா்பில் போட்டியிட்ட கே.குமரேசன் 2,889 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் யு.சனுஜா 6,228 வாக்குகளும் பெற்றனா். மடத்துக்குளம் தொகுதியை திமுகவிடம் தற்போது அதிமுக கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com