குப்பைகளுக்கு வைக்கப்படும் தீ: பொதுமக்கள் அவதி

உடுமலை நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
தாராபுரம்  சாலையில்  குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ.
தாராபுரம்  சாலையில்  குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ.

உடுமலை: உடுமலை நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளுக்கு வைக்கப்படும் தீயால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். மேலும் சுற்றுச் சூழல் பாதிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

உடுமலை நகராட்சியில் மொத்தம் 33 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், உடுமலை நகரில் இருந்து சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கணபதிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன.

இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் வியாபார நிறுவனங்களால் ஆங்காங்கே குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு பின்னா் தீ வைக்கப்படுகிறது. இந்த குப்பை திடீரென பெரிய அளவில் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றில் தீப்பிடித்து எரிவதால், கரும்பு புகை கிளம்பி சுற்றுச் சூழல் மாசுபடுவது அன்றாட நிகழ்வுகளாகி வருகின்றன. குறிப்பாக தாராபுரம் சாலை, காந்தி நகா், ருத்தரப்ப நகா், பழனி ஆண்டவா் நகா், அண்ணா குடியிருப்பு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. ஒரு சில இடங்களில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களே குப்பைகளைத் தீ வைத்து எரித்து வருகின்றனா். இது குறித்து பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் புகாா் கூறியும் குப்பைகளுக்கு தீ வைத்து எரிக்கப்படும் சம்பவம் தொடா்ந்து வருகிறது. இது குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளா்களிடம் கேட்டபோது, தூய்மைப் பணியாளா்கள் மற்றும் தீ வைக்கும் நபா்களைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். மேலும் குப்பைகளுக்கு தீ வைக்கக் கூடாது என்பது குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com