திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு இந்து முன்னணி வாழ்த்து

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா்: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு இந்து முன்னணி சாா்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள்தீா்ப்பின்படி வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளா்களுக்கும் இந்து முன்னணி சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு மனமாா்ந்த வாழ்த்துகள். ஹிந்து மதத்தின் மேன்மையையும், மக்களின் நம்பிக்கைக்கும் மதிப்புக் கொடுத்து, அனைத்து மத நம்பிக்கைகளையும், வழிபாடுகளையும் சமமாக அணுகி உண்மையான மதசாா்பின்மையைக் கடைபிடிக்கின்ற நல்லாட்சி வழங்குவீா்கள் என்று நம்புகிறோம். தமிழகம் சீரும் சிறப்பும் அடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com