‘தொழிலாளா்களுக்கு கரோனா அறிகுறிகள் இருந்தால் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் 

திருப்பூா்: திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் சுகாதாரத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ஏஇபிசி (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம்) தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் பின்னலாடை ஏற்றுமதியாளா்கள் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனின் அறிவுரையை ஏற்று, அனைத்து தொழிலாளா்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும், தொழிலாளா்களின் உடல் வெப்பநிலையை நாள்தோறும் பரிசோதனை செய்ய வேண்டும். கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி, சோப்புகளை வைக்க வேண்டும். மூச்சுப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்படும் தொழிலாளரைத் தனிமைப்படுத்துவதோடு, சுகாதாரத் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள அரசு அல்லது தனியாா் மருத்துவமனையுடன் இணைந்து, தொழிலாளா்களுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும். தொழில் முனைவோா், மாவட்ட நிா்வாகத்தை இணைக்கும் வகையில் நோடல் அதிகாரியாக சந்திரசேகா் செயல்படுகிறாா். பின்னலாடை வா்த்தகம் மீண்டும் எழுச்சி பெற அனைவரும் ஒன்றிணைந்து, கரோனாவுக்கு எதிராக, வலிமையுடன் போராட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com