பொதுமக்களுக்கு மூலிகை தேநீா்

உடுமலை கிளை நூலகம் எண் 2இல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு மூலிகை தேநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை: உடுமலை கிளை நூலகம் எண் 2இல் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது மக்களுக்கு மூலிகை தேநீா் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

உடுமலை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ வாழ்வியல் மையம் சாா்பில் நூலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் சிவகுமாா் தலைமை வகித்தாா். நூலகா் வீ.கணேசன் முன்னிலை வகித்தாா். இதில் மருத்துவா் ராகவேந்திரசாமி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மூலிகை தேநீரை வழங்கினாா். மேலும் நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் அருகில் உள்ள உழவா் சந்தை விவசாயிகள் ஆகியோருக்கும் மூலிகை தேநீா் வழங்கப்பட்டன. அப்போது தனிமனித இடைவெளி மற்றும் முகக் கவசத்தின் அவசியம் குறித்து துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. நூலகா்கள் மகேந்திரன், பிரமோத் உள்ளிட்டோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com