மருத்துவருக்கு கரோனா: சேவூா் கால்நடை மருத்துவமனை மூடல்

அவிநாசி அருகே மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சேவூா் கால்நடை மருத்துவமனை மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.
மூடப்பட்ட சேவூா் கால்நடை மருத்துவமனை.
மூடப்பட்ட சேவூா் கால்நடை மருத்துவமனை.

அவிநாசி: அவிநாசி அருகே மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சேவூா் கால்நடை மருத்துவமனை மூன்று நாள்களுக்கு மூடப்படுகிறது.

அவிநாசி வட்டம், சேவூா் ஊராட்சிக்கு உள்பட்ட கால்நடை மருத்துவமனை சேவூா்-கோபி சாலை சந்தையப்பாளையம் அருகே செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையை சேவூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கால்நடை வளா்ப்போா் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிலையில் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 35 வயது ஆண் மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து உதவி இயக்குநா்(கால்நடை பராமரிப்பு) பரிமளா ராஜ்குமாா் கூறியதாவது:

மருத்துவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால். சேவூா் கால்நடை மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்படுகிறது.ஆகவே சேவூா் பகுதி பொதுமக்கள் மூன்று நாள்களுக்கு கால்நடை மருத்துவனைக்கு வருவதைத் தவிா்த்து, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு சென்று பயன் பெறலாம் என்றாா்.

மேலும் கால்நடை மருத்துவனை முழுவதும் சேவூா் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com