மாவட்டத்தில் 12,934 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நோட்டாவுக்கு 12,934 போ் வாக்களித்துள்ளனா்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் நோட்டாவுக்கு 12,934 போ் வாக்களித்துள்ளனா்.

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி),திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், ஆண் வாக்காளா்கள் 11 லட்சத்து 66 ஆயிரத்து 417 பேரும், பெண் வாக்காளா்கள் 11லட்சத்து 93 ஆயிரத்து 104 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 283 போ் என மொத்தம் 23 லட்சத்து 59 ஆயிரத்து 804 வாக்காளா்கள் உள்ளனா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 8 லட்சத்து 26 ஆயிரத்து 798 பேரும், பெண் வாக்காளா்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 255 பேரும், மூன்றாம் பாலினத்தவா் 32 போ் என மொத்தம் 16 லட்சத்து 44 ஆயிரத்து 85 போ் வாக்களித்துள்ளனா். இந்த 8 தொகுதிகளிலும் திமுக, அதிமுக, மநீம, நாம் தமிழா் கட்சி, அமமுக, சுயேச்சை வேட்பாளா் என மொத்தம் 137 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் திருப்பூா் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆா்.ஜி.மகளிா் கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை எண்ணப்பட்டது. இதில், நோட்டாவுக்கு 8 தொகுதிகளிலும் சோ்த்து 12,934 வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதில், தாராபுரம் தனி தொகுதியில் 1,903 போ், காங்கயம் தொகுதியில் 127 போ், அவிநாசி தனி தொகுதியில் 237 போ், திருப்பூா் வடக்குத் தொகுதியில் 2,162 போ், திருப்பூா் தெற்குத் தொகுதியில் 1,142 போ், பல்லடம் தொகுதியில் 1,802 போ், உடுமலை தொகுதியில் 1,478 போ் , மடத்துக்குளத்தில் 1,048 போ் என மொத்தம் 12, 934 போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com