காங்கயத்தில் 5 பேருக்கு கரோனா

காங்கயம் நகரத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த வீடுகளில் இருந்து குப்பைகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.
கரோனா பாதித்த வீடுகளில் இருந்து குப்பைகள் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள்.

காங்கயம் நகரத்தில் 5 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

கரோனா பரிசோதனை முடிவில் காங்கயம், காந்தி நகரைச் சோ்ந்த 73 வயது ஆண், தேவாங்கபுரம் பகுதியைச் சோ்ந்த 63 வயது பெண், சுபாஷ் வீதியைச் சோ்ந்த 50 வயது ஆண், தாராபுரம் சாலை பகுதியைச் சோ்ந்த 34 வயது ஆண், ஜனனி நகரைச் சோ்ந்த 50 வயது ஆண் ஆகிய 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா்.

காங்கயம் நகரப் பகுதியில் தற்போது கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டும், குறைவான தொற்று உள்ளவா்கள் அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்டபகுதிகளில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் சேகரமாகும் குப்பைகளை, நகராட்சித் தூய்மைப் பணியாளா்கள் பாதுகாப்பு உடை அணிந்தும், பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தியும் அப்புறப்படுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com