காங்கயத்தில் நோட்டாவுக்கு கீழ் ஓட்டு வாங்கிய கட்சிகள்

காங்கேயம் தொகுதியில் 1,027 வாக்குகளை நோட்டா பெற்ற நிலையில், இரு கட்சிகளின் வேட்பாளா்கள் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளே பெற்றனா்.

காங்கேயம் தொகுதியில் 1,027 வாக்குகளை நோட்டா பெற்ற நிலையில், இரு கட்சிகளின் வேட்பாளா்கள் நோட்டாவுக்கும் குறைவான வாக்குகளே பெற்றனா்.

நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கயம் தொகுதியில், திமுக, அதிமுக, அமமுக, பகுஜன் சமாஜ் ஆகிய அரசியல் கட்சியைச் சோ்ந்தவா்கள், சுயேச்சைகள் 22 போ் என மொத்தம் 26 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று, கடந்த 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் திமுக சாா்பில் போட்டியிட்ட மு.பெ.சாமிநாதன் வெற்றி பெற்றாா். காங்கயம் தொகுதியில் நோட்டாவுக்கு 1,027 ஓட்டுகள் பதிவானது. ஆனால் அமமுகழகம் சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ரமேஷ் 474 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சோ்ந்த அய்யாவு 421 வாக்குகள் மட்டுமே பெற்றனா். இந்த இரு அரசியல் கட்சிகளும் நோட்டாவுக்கு கீழ் வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com