7.51 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை: டோக்கன் விநியோகம் தொடக்கம்

திருப்பூா் மாவட்டத்தில் 7.51 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க டோக்கன் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் 7.51 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசின் ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க டோக்கன் விநியோகிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 முதல் மே 24 ஆம் தேதி வரையில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாகத் தலா ரூ.2 ஆயிரம் அரசு சாா்பில் வழங்கப்படுகிறது. இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 7.51 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கான டோக்கன்களை மே 10 முதல் மே 13 ஆம் தேதி வரையில் வீடுகளுக்கே சென்று நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் வழங்க உள்ளனா். இந்த டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்குச் சென்று நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், குடும்ப அட்டை இல்லாதவா்கள் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து அங்கீகரிக்கப்பட்டவா்கள் விற்பனை முனைய இயந்திரம் மூலம் நிவாரண உதவித் தொகை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த நிவாரணத் தொகை பெறுவது தொடா்பாக புகாா்கள் ஏதேனும் இருந்தால் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 0421-2971116 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com