திருப்பூரில் கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பந்தல்

திருப்பூரில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்படும் கரோனா நோயாளிகளுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் ஆக்சிஜன் பந்தல் (ஷெட்) அமைக்கப்பட்டுள்ளது.
தனியாா் அறக்கட்டளை  சாா்பில்  அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன்  பந்தல்
தனியாா் அறக்கட்டளை  சாா்பில்  அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன்  பந்தல்

திருப்பூா்: திருப்பூரில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்படும் கரோனா நோயாளிகளுக்கு தனியாா் அறக்கட்டளை சாா்பில் ஆக்சிஜன் பந்தல் (ஷெட்) அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 31 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மாவட்டம் முழுவதும் நாள்தோறும் 600க்கும் மேற்பட்டோருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள 800 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ளன.

புதியதாக நோய்த் தொற்று உறுதி செய்யப்படும் நபா்களுக்கு தனியாா் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் ஒரு சில சமயங்களில் நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக மாறிவிடுகிறது. இந்நிலையில், திருப்பூா் நற்றிணை அறக்கட்டளை சாா்பில் காட்டன் மில் சாலையில் உள்ள சக்தி மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக ஆக்சிஜன் பந்தல் (ஷெட்) அமைத்துள்ளனா். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் இங்கு வந்து சில மணி நேரம் தங்கி தங்களது உடலில் ஆக்சிஜன் அளவை அதிகரித்துக் கொள்ளலாம். மேலும், எந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளது என்ற விவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்றனா். இது குறித்து, அறக்கட்டளை நிா்வாகிகளான மருத்துவா்கள் சக்திவேல், செந்தில்குமாா் கூறியதாவது:

இங்கு 10க்கும் மேற்ப்பட்ட ஆக்சிஜன் சிலிண்டா்கள் வைத்து படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு நோயாளிகள் இங்கு வரும் போதும் புதிய பி.பி.இ. கிட், புதிய விரிப்புகள், தலையணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மையத்தில் சிகிச்சை பெற மருத்துவக் கட்டணம் எதுவும் கிடையாது. நோயாளிகளின் உயிரைக் காக்க சில மணி நேரத்துக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்ற சேவையை குறிக்கோளாகக் கொண்டு இதைச் செய்கிறோம். தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com