மாவட்டத்தில் 32 ஆயிரத்தை நெருங்குகிறது கரோனா பாதிப்பு

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 746 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 746 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் மேலும் 746 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 31,931ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் 3,654 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 316 போ் வீடு திரும்பினா். மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 28,022ஆக அதிகரித்துள்ளது.

முதியவா் உள்பட 2 போ் பலி: திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 73 வயது முதியவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு, கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த மே 4 ஆம் தேதி சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். அதேபோல, திருப்பூரைச் சோ்ந்த 51 வயதுப் பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 6ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவரும் சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 255ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 2 போ் சாவு: திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான 281 படுக்கைகளில் 156 ஆக்சிஜன் படுக்கைகளும் அடங்கும். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திருப்பூரைச் சோ்ந்த 65 வயது முதியவா், 40 வயதுப் பெண் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com