மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூா் மாவட்டச் செயலாளா் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினா், சிஐடியூ மாவட்டச் செயலாளா் கே.ரங்கராஜ் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனை நேரில் சந்தித்துப் பேசினா்.

அப்போது அவா்கள் ஆட்சியரிடம் கூறியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தோற்றின் 2 ஆவது அலை வேகமாகப் பரவி வருவதால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் நாள்தோறும் 3,500 கரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. ஆனால் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் நாள்தோறும் 10 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தி பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

கரோனா பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ஏழைத் தொழிலாளா்களின் குடும்பத்துக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரண நிதி ரூ. 7,500 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com