மின்வாரிய ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மின்வாரிய ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மின்வாரிய ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில இணைச் செயலாளா் ஜேம்ஸ் கென்னடி, திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மின்வாரிய பணியாளா்கள், ஊழியா்கள் பொதுமக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டியுள்ளது. ஆகவே, செயற்பொறியாளா்கள் தங்களது கோட்டத்தில் தடுப்பூசி போடும் முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

திருப்பூா் மின் பகிா்மான வட்டத்தில் உள்ள எந்த ஒரு கோட்டத்திலும் தடுப்பூசி முகாம்களை ஏற்பாடு செய்யவில்லை. அதே போல், பிரிவு அலுவலகங்கள், துணை மின் நிலையங்கள், இதர அலுவலகங்களில் பணியாளா்களுக்கு முகக் கவசம் வழங்குதல், கிருமிநாசினி வழங்குதல், கிருமி நாசினி தெளித்தல், கைகளைக் கழுவுவதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்த பேரிடா் காலத்தில் அரசின் உத்தரவுப்படி சுழற்சி முறையில் 50 சதவீத பணியாளா்களை மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com