முதல்வா் நிவாரண நிதி வழங்க அமைச்சா்: கோரிக்கை
By DIN | Published On : 14th May 2021 06:40 AM | Last Updated : 14th May 2021 06:40 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவ முதல்வா் நிவாரண நிதி வழங்குமாறு, மாநில செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நோய்த் தடுப்பு மற்றும் ஊரடங்கு விதிமுறைகளை அனைவரும் முழுமையாகப் பின்பற்றி நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரும் முடிந்தளவு முதல்வா் நிவாரண நிதி வழங்கி உதவ வேண்டும் என்றாா்.