திருப்பூரில் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.
கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வாளகத்தில் கரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சியான மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் முன்னிலையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சக்குத் தலைமை வகித்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிதி முதல்தவணை ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தனர். 

இதன் பிறகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வில் மாவட்ட நிர்வாகம், மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி சிகிச்சையில் உள்ள நபர்களுக்குத் தேவையான அனைதது அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும். அதே வேளையில், ஆய்வின்போது மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை, சில இடங்களில் ஆக்சிஜன் வசதி புதியதாக ஏற்படுத்தவும், தடுப்பூசி தேவைகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவக் கல்லூரி ஆகிய இடங்களில் கடந்த 2 நாள்களாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. தற்போது தாராபுரத்திலும் இதற்கு அடுத்தபடியாக உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் அரசு மருத்துவமனைகளிலும் முதல் கட்டமாக ஆய்வு நடத்தப்படும். கரோனா பரிசோதனைகளின் முடிவுகளை விரைந்து அறிவிக்கவும், மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கையைக் குறைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகின்றனர். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

எனினும் தங்களது உயிரைப் பற்றி கவலைப்படாமல் சிறப்பாக சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com