தமிழக நிதியமைச்சருக்கு இந்து முன்னணி கண்டனம்

ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

திருப்பூா்: ஈஷா யோக மையத்தின் நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக தமிழக நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜனுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக அமைச்சரவையில் புதிதாகப் பொறுப்பேற்ற நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன், சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளாா்.

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை விடுவித்து தனி வாரியம் அமைத்து ஆன்றோா், மடாதிபதிகள், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளிடம் ஒப்படைத்து பாதுகாக்க வேண்டும் என்று இந்து முன்னணி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதனடிப்படையில், சமீப காலமாக சத்குரு ஜக்கி வாசுதேவ் கோயிலை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சத்குரு ஜக்கி வாசுதேவை இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com