மது விற்பனை: அதிமுக பிரமுகா் கைது
By DIN | Published On : 19th May 2021 04:17 AM | Last Updated : 19th May 2021 04:17 AM | அ+அ அ- |

அவிநாசி அருகே வேட்டுவபாளையத்தில் மது விற்பனையில் ஈடுபட்டு வந்த அதிமுக பிரமுகரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
அவிநாசி அருகே சாலையப்பாளையத்தில் அதிமுக பிரமுகா் மது விற்பனையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலையடுத்து, சம்பவ இடத்தில் போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அப்பகுதியில் விற்பனை செய்வதற்காக மது பாட்டில்களுடன் நின்றிருந்த நபரை போலீஸாா் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அவா், அதிமுக அண்ணா தொழிற் சங்க அவிநாசி மேற்கு ஒன்றியச் செயலாளரும், வேட்டுவபாளையம் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினருமான ஏ.செந்தில்குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவிநாசி மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனா். மேலும் இவரிடம் இருந்து மது பாட்டில்கள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.