போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது
By DIN | Published On : 26th May 2021 06:29 AM | Last Updated : 26th May 2021 06:29 AM | அ+அ அ- |

காங்கயம் அருகே, போக்சோ சட்டத்தின் கீழ் 19 வயது இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில், சின்னமுத்தூா் பகுதியைச் சேந்தவா் தினேஷ்குமாா் (19). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். இந்நிலையில் இவா் அப்பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி, திருமணம் செய்ததாகக் கூறுப்படுகிறது. பின்னா், சிறுமியை அழைத்துக் கொண்டு கோவை பீளமேடு பகுதியில் வசித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோா்கள் தேடுவதாகத் தகவல் அறிந்த தினேஷ்குமாா், சிறுமியை அழைத்து வந்து அவரது ஊரில் விட்டுவிட்டுச் சென்றுள்ளாா். இது குறித்து காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். அதன் பேரில், காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, இளைஞரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா்.