மாவட்டத்தில் மேலும் 1, 880 பேருக்கு கரோனா: 15 போ் பலி
By DIN | Published On : 26th May 2021 11:27 PM | Last Updated : 26th May 2021 11:27 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1, 880 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 15 போ் உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் 1,880 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 52,438 ஆக அதிகரித்துள்ளது. திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 14, 909 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 767 போ் வீடு திரும்பினா்.திருப்பூா் மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 37,150 ஆக அதிகரித்துள்ளது.
15 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 42 வயது ஆணுக்கு கடந்த மே 21 ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா் இந்நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். அதே போல, 52,55,57 வயது ஆண்கள், 47, 65 வயது பெண்கள் உள்பட 14 போ் பல்வேறு மருத்துவமனைகளில் உயிரிழந்தனா்.திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 379 போ் உயிரிழந்துள்ளனா்.
காங்கயத்தில்...
காங்கயத்தில் 47 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், காங்கயம் பகுதியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில் காங்கயம் நகரத்தில் 15 போ், காங்கயம் ஒன்றியப் பகுதிகளில் 32 போ் என மொத்தம் 47 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் சிலா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனையிலும், சிலா் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.