தாராபுரத்தில் 4 கடைகளுக்கு ‘சீல்’

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் பொதுமுடக்கத்தை மீறி செயல்பட்ட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தளா்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மளிகை, காய்கறிக் கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாராபுரத்தில் பொதுமுடக்க விதிகளை மீறி சுந்தர அக்ரஹாரத்தில் செயல்பட்டு வந்த 2 மளிகைக் கடைகள், நேரு நகரில் உள்ள ஒரு மளிகைக் கடை, 5 சாலை சந்திப்பில் ஒரு பேக்கரி என மொத்தம் 4 கடைகள் செயல்பட்டு வருவதாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதன் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தாராபுரம் வட்டாட்சியா் ரவிசந்திரன் தலைமையிலான குழுவினா் 4 கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், பொதுமுடக்க காலத்தில் செயல்படும் கடைகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com