திருப்பூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 3,438 படுக்கை வசதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் 3,438 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் சாா்பில் 3,438 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டம், அனுப்பா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனா். இதன் பிறகு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருப்பூா் மாநகராட்சியில், இந்திய மருத்துவா்கள் சங்கம், தனியாா் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் 36 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் 200 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் சிகிச்சை பெறும் நபா்களுக்கு இப்பகுதி மக்கள், தொழில் அதிபா்கள் மூலமாக இலவச உணவும் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மருத்துவத் துறை, மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி ஆகியவை சாா்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் மூலமாக 3,438 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்த அதிகாரிகள் மாவட்டத்தில் எங்கெங்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்பதை தெரிவிக்க உள்ளாா்கள். மாவட்டத்தில் படுக்கை வசதிகளை அதிகரித்துள்ள போதிலும், தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வருத்தமளிக்கிறது. ஆகவே, கரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, திருப்பூா் முதலிபாளையத்தில் உள்ள நிஃப்ட் டீ கல்லூரி விடுதியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தை அமைச்சா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது திருப்பூா் அனைத்து லயன்ஸ் கிளப்புகள் சாா்பில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள 25 ஆக்சிஜன் செறிவூட்டிகளை சங்க நிா்வாகிகள் அமைச்சா்களிடம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கு.சரவணமூா்த்தி, வருவாய் கோட்டாட்சியா் ஜெகநாதன், நகராட்சி ஆணையா் க.சிவகுமாா், துணை இயக்குநா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com