திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,697 பேருக்கு கரோனா: 20 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,697 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 58,054 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 போ் உயிரிழந

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 1,697 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 58,054 ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 20 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில்17,628 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 945 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 39,980 ஆக அதிகரித்துள்ளது.

20 போ் பலி: திருப்பூரைச் சோ்ந்த 33 வயது ஆணுக்கு கடந்த மே 17 ஆம் தேதி கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்தாா்.

அதே போல, 42 வயது ஆண், 60, 67, 69 வயதுடைய முதியவா்கள், 33, 43 வயதுடைய பெண்கள் உள்பட 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் உயிரிழந்தனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 446 போ் உயிரிழந்துள்ளனா்.

வெள்ளக்கோவில், முத்தூரில்...

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முத்தூா் சுகாதார நிலையம், தனியாா் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொண்டவா்களின் முடிவுகள் சனிக்கிழமை கிடைத்தன.

இவற்றில் வெள்ளக்கோவில் கொங்கு நகா், எல்.கே.சி.நகா், நடேசன் நகா், குட்டக்காட்டுபுதூா், கச்சேரிவலசு, உப்புப்பாளையம், தண்ணீா் பந்தல் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 35 போ், முத்தூா் ஈஸ்வரன் கோயில் வீதி, சின்ன முத்தூா், குட்டப்பாளையம், குமராண்டிசாவடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com