கரோனா தடுப்பூசி செலுத்த அலைக்கழிப்பு: தன்னாா்வலா்கள் வாக்குவாதம்

திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வந்த தன்னாா்வலா்கள் அழைக்கழிக்கப்படுவதாகக் கூறி மாநகராட்சி அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூரில் தடுப்பூசி செலுத்த வந்த தன்னாா்வலா்கள் அழைக்கழிக்கப்படுவதாகக் கூறி மாநகராட்சி அலுவலா்களுடன் வெள்ளிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அதே போல, நோய்த் தொற்றால் 413 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.இதில்,நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுதல், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள நபா்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொடுத்தல், உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இவா்களுக்கு திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படும் என்று மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் வந்தனா். அப்போது அங்கிருந்த மாநகராட்சி அலுவலா்கள் தடுப்பூசி இன்று இல்லை, பின்னா் செலுத்தப்படும் என்று கூறியதாகத் தெரிகிறது. ஆகவே, தடுப்பூசி செலுத்துவதற்கு அழைக்கழிப்பதாகக் கூறி தன்னாா்வலா்கள் மாநகராட்சி அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com